×

இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்

புதுக்கோட்டை: இந்திய அளவில் நடந்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனநல மருத்துவர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மனநல சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மனநல மருத்துவ பயிலரங்க தொடக்க விழா புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் மனநலம் குறித்த மலரை திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மனநல மருத்துவர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
முதல் முறையாக மாநில அளவிலான மனநல மருத்துவ பயிலரங்கம் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மண்ணில் நடத்துகிறோம். இந்த பயிலரங்கத்தில் முக்கிய நோக்கம் மனநலத்தில் என்னென்ன அறிவியல் பூர்வமாக நடக்கிறது, சிக்கலான மனநலம் குறித்த தீர்வு காண்பது குறித்தும் இந்தக் கருத்து அரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பங்கு பெற தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து முதுகலை மாணவர்கள் வந்துள்ளனர். மேலும் இந்தப் பகுதிகளில் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறுகிறது.

இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8ல் ஒருவர் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை இடைவெளி என்பது பத்திலிருந்து 20% மக்கள் மட்டுமே மனநலத்திற்கு சிகிச்சை பெறுகின்றனர். 80லிருந்து 90% மக்கள் மனநலத்திற்கு சிகிச்சை பெறுவதில்லை, மனநோய் குறித்த அறியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்திய மனநல சங்கம் தமிழ்நாடு கிளை நமக்கான மனநல திட்டத்தின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வையும் அறியாமையை போக்க நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம்.

அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு மனநல மருத்துவர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. தற்போது இறப்பவர்கள் அதிகமானோர் மனநோய் மற்றும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மனரீதியான பிரச்னைகளை உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் மனநல அழுத்தம் காரணங்களினால் பக்கவாதம் மாரடைப்பு உள்ளிட்டவளை ஏற்படுகிறது. முக்கியமான காரணமாக உள்ளது இவை அனைத்திலும் விடுபட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் விழிப்புணர்வாக யோகா உள்ளிட்டவைகளை வாழ்க்கை முறை மாற்றமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் தடுக்கக்கூடிய முக்கியமான முறையாக உள்ளது என்று தெரிவித்தார்.

அதன்பின் பேசிய மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் கூறுகையில்,
பொதுவாக பொதுமக்களிடம் மனநலம் சார்ந்த தயக்கம் உள்ளது மருத்துவ மாணவர்கள் மட்டும் அல்லாது அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மனநலம் சார்ந்த கல்வி அறிவை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விருப்பத்துடன் வரும் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த அறிகுறிகளை கண்டுபிடிப்பது எப்படி முதலுதவி கொடுப்பது எப்படி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு செய்திகள் பகிர்ந்து வருவதால் உதவி கேட்கும் தன்மை தற்போது மாணவர்களிடையே அதிகரித்து உள்ளது என்று தெரிவித்தார்.

The post இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Psychiatric Association ,Pudukkottai ,Tamil Nadu Psychiatric Association ,Pudukkottai District Mental Health Society ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை